Tuesday, September 11, 2018

திருத்தணி முருகன் கோயில்

திருத்தணி முருகன் கோயில், இந்தியா, தமிழ்நாடு, திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணி மலையில் அமைந்துள்ளது. ஆண்டின் 365 நாட்களையும் குறிக்கும்படியாக 365 படிகளைக் கொண்டது இந்த மலைக்கோயில். இக்கோயில் அறுபடை வீடுகளில் ஒன்று. திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமிது. முத்துச்சாமி தீட்சதராலும் பாடப்பட்ட தலம்.இக்கோயிலை தணிகை முருகன் கோயில் என்றும் அழைப்பர்.

சங்க காலப் புலவரான நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படையில் இக்கோயில் குறித்த குறிப்புகள் காணப்படுகிறது. இக்கோயில் விசயநகர மன்னர்களாலும், உள்ளூர் நிலக்கிழார்களாலும் பேணப்பட்டு வந்தது.

No comments:

Post a Comment